72 கடற்படை வீரர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையில் பணி யாற்றும் 43 மூத்த கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 மற்றும் 29 இளைய கடற்படை வீரர்களுக்கு ரூபா 200,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2021 ஏப்ரல் 07) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

கடற்படையில் நீண்ட காலமாக பணியாற்றும் சிரேஷ்ட மற்றும் இளைய வீரர்களின் சேவை மதிப்பீடு செய்யும் வகையில் குறித்த வட்டியற்ற கடன் வழங்கப்படுகின்றன. இது வரை 3567 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு மற்றும் 139 இளைய கடற்படை வீரர்களுக்கு இந்த வட்டி இல்லாத கடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், வரும் காலகட்டத்தில், 2010 கடற்படை வீர்ர்களுக்கு குறித்த வட்டியற்ற கடன் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடத்தக்கது.