கடற்படை தளபதியின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

அதிகாரிகள், மாலுமிகள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு கொண்ட இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என்று நானும் எனது குடும்பத்தினரும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

இன்று நாம் அனைவரும் அனுபவிக்கும் அமைதியின் உண்மையான பங்களிப்பாளர்களான, நமது தாய்நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான போரில் மிகப் பெரிய தியாகம் செய்த மற்றும் ஊனமுற்ற அனைத்து போர் வீரர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் நான் மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.

தங்கள் கடமையைச் செய்வதற்கான உன்னத நோக்கத்துடன் தங்கள் பெற்றோர், குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் புத்தாண்டைக் கொண்டாட வாய்ப்பில்லாத அனைத்து கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பெரும் அர்ப்பணிப்பையும் பெருமையுடன் நினைவுகூர்கின்றேன்

தற்போது உலக முழுவதும் பரவி வரும் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொண்டு இன்னும் சிகிச்சை பெற்று வரும் கடற்படை உறுப்பினர்கள் மற்றும் உலக மக்கள் அனைவரும் மிக விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன்.

அனைத்து கடற்படை பணியாளர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் உங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரின் எதிர்கால அபிலாஷைகளுக்கு நான் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றத்தோடு நீங்கள் நம்பும் அனைத்து கடவுள்களின் தொடர்ச்சியான பாதுகாப்பை பெற வாழ்த்துகிறேன்.

தொழில் ரீதியாக முதிர்ச்சியடைந்த ஒரு வலுவான கடற்படையை கட்டியெழுப்ப நாங்கள் அனைவரும் தொடர்ந்து ஈடுபடுவோம்.