இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலொன்று கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான “INS RANVIJAY” கப்பல் மூன்று நாள் (03) உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு 2021 ஏப்ரல் 14 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

இவ்வாரு கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த “INS RANVIJAY” கப்பல் 146.2 மீட்டர் நீளமான Destroyer வகைப்பாட்டைச் சேர்ந்த ஒரு போர் கப்பலாகும். இது 425 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் என் ஹரிஹரன் (Captain N Hariharan) இன்று (2021 ஏப்ரல் 15) மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷனவை கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் பற்றி கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில், கோவிட் 19 ஆபத்தை எதிர்கொண்டு பணியாற்றும் மாலுமிகளின் பயன்பாட்டுக்காக இந்திய கடற்படை வழங்கிய சுகாதார உடைகள் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியிடம் அடையாளமாக ஒப்படைக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாற்றப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, “INS RANVIJAY” கப்பலின் கட்டளை அதிகாரி பத்தரமுல்லை பகுதியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை நினைவுச்சின்னத்துக்கு மாலையொன்று அணிவித்தார், மேலும் இந் நிகழ்வுகளுக்காக இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் விகாஸ் சூத் அவர்களும் கலந்து கொண்டார்.

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த இந்த கப்பல் தொடர்பான நடவடிக்கைகள் தற்போதுள்ள கோவிட் 19 பெருக்கம் தடுப்பு சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கப்பல் அதன் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்து 2021 ஏப்ரல் 16 அன்று தீவை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டுள்ளது.