திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் இலங்கை கடற்படைக்கு ஆசீர்வாதமலித்து கிறிஸ்துவ மத நிகழ்ச்சியொன்று நடைபெற்றது

இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துவ மத நிகழ்ச்சி 2021 ஏப்ரல் 17 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில் திருகோணமலை பிஷப் கலாநிதி கிறிஸ்டியன் நொயெல் இமானுவேல் உள்ளிட்ட பாதிரியார்களின் பங்கேப்புடன் கடற்படை கப்பல்துறையில் உள்ள Christ the King Chapel தேவாலயத்தில் நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையின் நலனுக்காக தொடர்ச்சியான மத நிகழ்ச்சிகளைத் துவக்கி, புத்த மத நிகழ்ச்சிகள் அனுராதபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ருவன்வேலி மகா சேய முன்னும், ஜெய ஸ்ரீ மகா போதி முன்னும், கண்டியில் உள்ள புனித தலதா மாலிகை முன்னும் இடம்பெற்றது. அதன்படி, இந்த தொடர் மத நிகழ்ச்சிகளின் கிறிஸ்தவ மத நிகழ்ச்சி ஏப்ரல் 17 அன்று திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் உள்ள Christ the King Chapel தேவாலயத்தில் நடைபெற்றதுடன் இங்கு ஊனமுற்ற அனைத்து கடற்படை வீரர்களும் உட்பட முழு கடற்படைக்கும் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த கிறிஸ்தவ மத நிகழ்ச்சிக்காக கடற்படையின் தலைமை அதிகாரியும், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் தலைவருமான ரியர் அட்மிரல் ருவன் பெரேரா, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஒய்.என் ஜயரத்ன, கொடி அதிகாரி கொடி கட்டளை, கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி உட்பட கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள், மாலுமிகள், மாலுமிகளின் குடும்பங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.