கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்று கடற்படையால் கம்பஹ பகுதியில் நிறுவப்பட்டது

கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான உள்கட்டமைப்புகள் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை வலுப்படுத்தி, கம்பஹ பகுதியில் ஒரு இடைநிலை சிகிச்சை மையமொன்றை நிறுவ 2021 மே 02 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு உடனடியாக பதிலளித்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கம்பஹ, வெரெல்லவத்த பகுதியில் மூடப்பட்ட ஒரு தொழிற்சாலை கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழிலாளர் உதவியுடன் கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்றாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி, இந்த திட்டத்தை விரைவாக முடிக்க கடற்படை சிவில் மற்றும் மின் பொறியியல் பிரிவுகளைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைநிலை சிகிச்சை மையத்தில் கிடைக்கும் இடத்தைப் பொறுத்து 2000 படுக்கைகள் வரை தங்குவதற்கு உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.