கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்று பூஸ்ஸ கடற்படை தளத்தில் நிறுவப்பட்டது

கொவிட் 19 நோய்த்தொற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவாக, 162 படுக்கைகள் கொண்ட கோவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமொன்றை 2021 மே 04 ஆம் திகதி காலி, பூஸ்ஸ கடற்படை தளத்தில் நிறுவப்பட்டது.

புதிய கடற்படையினர்களின் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் நான்கு மாடி (04) கட்டிடமொன்று இவ்வாரு தேசிய நலனைப் பொறுத்து கடற்படையால் கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. 12 வார்டுகள் மற்றும் 150 படுக்கைகள் இந்த இடைநிலை சிகிச்சை மையம் கொண்டுள்ளதுடன் 12 படுக்கைகள் கொண்ட கூடிய உயர் சார்பு பிரிவொன்றம் ((High Dependency Unit- HDU)) இங்கு உள்ளது. இந்த சிகிச்சை மையத்தில் நோயாளிகளை அனுமதிப்பது 2021 மே 04 முதல் தொடங்கியதுடன் கடற்படையால் இரண்டு கடற்படை மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவர்களையும் சிகிச்சை பிரிவில் இணைத்துள்ளது.