கெலனி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மிதக்கும் கழிவுத் தடையை மீண்டும் நிறுவ கடற்படையின் உதவி

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கெலனி ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து சேதமடைந்த அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக நீர் பெறும் இடத்திற்கு (water intake well) கழிவுகள் நுழைவதைத் தடுக்கப் பயன்படுத்தப்பட்ட மிதக்கும் கழிவுத் தடையை (Floating Boom) மீண்டும் நிறுவ இலங்கை கடற்படை 2021 மே 18 ஆம் திகதி உதவி வழங்கியது.

அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக கெலனி ஆற்றில் இருந்து நீர் பெறும் இடத்திற்கு தண்ணீரில் மிதந்து வரும் குப்பைகள் மற்றும் எண்ணெய் பாகங்கள் நுழைவதைத் தடுப்பதுக்காக சுமார் 320 அடி நீளமுள்ள சிறப்பு மிதக்கும் கழிவுத் தடையொன்று நிறுவப்பட்டுள்ளது. களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தபோது, இந்த தடை உடைந்து ஆற்றின் கீழே சுமார் 400 மீட்டர் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் விடுத்த கோரிக்கைக்கு கடற்படை உடனடியாக பதிலளித்து மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட சுழியோடி மற்றும் சிறப்பு படகு படையின் கடற்படையினர்களைக் கொண்ட ஒரு குழுவை இந்த பணிக்காக அனுப்பியது.

அதன்படி, கடற்படையினர் செட்ரிக் படகுகலைப் பயன்படுத்தி நீரில் சுமார் 400 மீட்டர் அடித்துச் செல்லப்பட்டிருந்த மிதக்கும் தடையை மீண்டும் கொண்டு வந்து அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் எடுக்கும் இடத்தில் அதை நிறுவியது.

மேலும், எந்தவொரு அவசர காலத்திலும் உதவி வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.