பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன

கடற்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற காலி, பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் 2021 மே 19 ஆம் திகதி காலி பிஷப் ரேமன் விக்ரமசிங்கவின் தலைமையில் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. < p>

இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பரிசோதனை மற்றும் அவற்றின் பயன்பாட்டிற்கு தேவையான உடல் வெப்பநிலை அளவீடுகள் (Digital Thermo Meter), இரத்த அழுத்தம் அளவீடுகள் (Pulse Oxi Meter/ Automatic BP Monitor), சுவாச ஆதரவுகள் (Nebulizer Machine), ஈசிஜி இயந்திரங்கள் (ECG Machine) மற்றும் படுக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நன்கொடை காலி பிஷப் ரேமன் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் கத்தோலிக்க தர்மதூத சங்கங்களின் தேசிய இயக்குநர் ரோஹான் பெசில் அவர்களால் காலி பிஷப்பின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தெற்கு மாகாண ஆளுநர் விலி கமகே, தெற்கு கடற்படை கட்டளையின் துணை தளபதி மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் மருத்துவ அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.