கடற்படையால் தேனீ வளர்ப்பை பிரபலப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

தேனீ காலனிகளைப் பாதுகாப்பதற்காக உலகம் முழுவதும் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக அறிவித்துள்ளதுடன் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் கடற்படையினரால் பராமரிக்கப்படுகின்ற தேனீ வளர்ப்பு திட்டத்தின் 50 வது தேனீ காலனியை நிறுவும் நிகழ்வு 2021 மே 20 அன்று உலக தேனீ தினத்துக்கு இணையாக நடைபெற்றது.

முழு சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் அதன் பல்லுயிர் பெருக்கத்திற்கும், மகரந்தச் சேர்க்கையாக உணவுப் பாதுகாப்பிற்கும் தேனீக்கள் செய்யும் மிகப்பெரிய பங்களிப்பு குறித்து உலகின் கவனத்தை ஈர்ப்பதுக்காக மே 20 ஐ உலக தேனீ தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி, 2021 ஜனவரியில் திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் இயற்கையான பசுமை சுற்றுச்சூழல் அமைப்புடன் தொடங்கப்பட்ட “Project Navy Bees” என்ற தேனீ காலனி ஸ்தாபன திட்டத்தில் விரிவாக்கமாக 50 வது தேனீ காலனி, உலக தேனீ தினத்துக்கு இணையாக திருகோணமலை கடற்படை கப்பல்துறை Chapel Hill யில் நிறுவப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், திருகோணமலை கடற்படை கப்பல்துறை மற்றும் சோபா தீவில் பல்வேறு இடங்களில் தேனீ காலனிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, தேனீ வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு திட்டமொன்று மே 20 அன்று Chapel Hill பகுதியில் நடத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த திட்டம் திருகோணமலை கடற்படை கப்பல்துறை பகுதியில் 100 தேனீ காலனிகளாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.