வெளிச்செல்லும் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தில் இராணுவம், விமானம் மற்றும் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் கர்னல் டெனிஸ் ஐ ஸ்கோடா (Colonel Denis I. Shkoda) அவர்கள் இன்று (2021 ஜூன் 03) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் தனது பதவிக் காலத்தில் வழங்கிய உதவிகளுக்கு கடற்படைத் தளபதியிடம் நன்றி தெரிவித்தார். மேலும், அவரது பதவிக் காலத்தில் கடற்படைக்கு அளித்த ஆதரவைப் பற்றி கடற்படைத் தளபதி பாராட்டினார்.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்து நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர், கடற்படைத் தளபதியும், ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும் நினைவு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.

மேலும், இந்நிகழ்வுக்காக இலங்கையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் பவெல் வி. இவஷின்னிகோவ் (Colonel Pavel V.Ivashinnikov) அவர்களும் கலந்து கொண்டார்.