கடற்படையினரால் தலைமன்னார் பிரதேச வைத்தியசாலையில் நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொது மக்களுக்காக திறந்து வைப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக தலைமன்னார் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் அவர்களால் 2021 ஜூன் 19 அன்று திறந்து வைக்கப்பட்டது.

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகத்தின் அனுசரணையிலும், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழிலாளர் உதவியுடனும், மன்னார் மாவட்டத்தில், தலைமன்னார் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் வைத்தியசாலைக்கு வரும் பொதுமக்கள் உட்பட அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கப்படும்.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த திறப்பு விழாவில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் டி.வீனோதன், டாக்டர் பாக்யா வீரவர்தன உட்பட வடமத்திய கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் பங்கேற்றனர்.