கொமாண்டர் பராக்ரம சமரவீர நினைவு உள்ளரங்க விளையாட்டு வளாகம் வெலிசர கடற்படை வளாகத்தில் திறக்கப்பட்டது

புதிதாக கட்டப்பட்ட இலங்கை கடற்படை உள்ளரங்க விளையாட்டு வளாகம் கொமாண்டர் பராக்ரம சமரவீர நினைவு உள்ளரங்க விளையாட்டு வளாகம் என்று பெயரிடப்பட்டு இன்று (2021 ஜூன் 23) கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தளபதியுமான வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் மற்றும் கொமாண்டர் (இறந்த) பராக்ரம சமரவீர கடற்படை அதிகாரியின் அன்புள்ள மனைவி திருமதி சுதர்ஷனி சமரவீரவின் பங்கேற்புடன் வெலிசர கடற்படை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

கடற்படைக்குள் விளையாட்டுகளை மேம்படுத்தி கடற்படை விளையாட்டு வீரர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், தற்போதைய கடற்படை தளபதி அப்போதைய துனை தலைமை அதிகாரியாக இருந்த காலத்தில், 2020 மார்ச் 18 அன்று இந்த உள்ளரங்க விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகள் வெலிசர கடற்படை வளாகத்தில் தொடங்கப்பட்டன. அதன் படி, விரைவாக கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட இந்த உள்ளரங்க விளையாட்டு வளாகத்தில் கைப்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, நெட்பால் மற்றும் கராத்தே, ஜூடோ, டய்கொண்டோ, மல்யுத்தம், வுஷு மற்றும் கபடி போன்ற விளையாட்டுகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்டுள்ளதுடன் ஒரு நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கு அமரக்கூடிய திறனையும் கொண்டுள்ளது.

கொமாண்டர் பராக்ரம சமரவீர இலங்கை கடற்படை கப்பல் ரணவிருவின் கட்டளை அதிகாரியாக 1996 ஜூலை 19 ம் திகதி முல்லைத்தீவு கடலில் கவசக் கப்பல்களின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு அளிக்கும் போது எல்டிடிஇ பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட கடுமையான போரின் போது இறந்தார். எதிரிக்கு எதிராக காட்டப்பட்ட துணிச்சலுக்கும் வீரத்திற்கும் அவருக்கு வீர விகரம விபூஷன பதக்கம் (டப்.டப்.வி) வழங்கப்பட்டது. மேலும் அவர் 1989-1990 காலப்பகுதியில் கடற்படை ரக்பி அணியின் தலைவராக இலங்கை கடற்படைக்கு செய்த சாதனைகளுக்காக கடற்படை வண்ணங்களை வென்றார். அதன்படி, கொமாண்டர் (இறந்த) பராக்ரம சமரவீர தேசத்திற்காக செய்த மிக உயர்ந்த தியாகத்தை நினைவுகூரும் விதமாகவும், கடற்படை விளையாட்டுகளின் முன்னேற்றத்திற்கு செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், இந்த உள்ளரங்க விளையாட்டு வளாகத்திற்கு ‘கொமாண்டர் பராக்ரம சமரவீர நினைவு உள்ளரங்க விளையாட்டு வளாகம் ' என்று பெயரிடப்பட்டதுடன் அதை இன்று (ஜூன் 23) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், இந்த உள்ளரங்க விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க பங்களித்த கடற்படை வீரர்களையும் கடற்படை தளபதி பாராட்டினார்.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த திறப்பு விழாவில் துனை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா, பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க, தன்னார்வ கடற்படையின் தளபதி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் உபுல் த சில்வா, பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன, கடற்படை செயல் இயக்குநர் விளையாட்டு கேப்டன் ஆர்.எஸ்.சி.ஆர்.பொன்சேகா, கொமாண்டர் (இறந்த) பராக்ரம சமரவீரவின் இரண்டு மகன்களான லெப்டினன்ட் கமாண்டர் (மருத்துவம்) சமித சமரவீர மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் (வழங்கள்) பாதிய சமரவீர உட்பட கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளை ஆகியவற்றின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.