கடற்படை ஆராய்ச்சி பிரிவு மூலம் வெளியிடப்படுகின்ற கடற்படை இதழின் ஒன்பதாவது பதிப்பு வெளியிடப்பட்டது

கடற்படை ஆராய்ச்சி பிரிவு மூலம் வெளியிடப்படுகின்ற கடற்படை இதழின் ஒன்பதாவது பதிப்பு இன்று (2021 ஜூலை 14) கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தளபதி கேப்டன் லசந்த விதானகேவினால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் பகுப்பாய்வு சிந்தனை, கல்வி எழுதுதல் மற்றும் விரிவான வாசிப்பு திறனை மேம்படுத்துதல் மற்றும் கடற்படை பணியாளர்களை ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த கடற்படை இதழ் வெளியிடப்படுகின்றது.