ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற கடற்படை வீராங்கனைக்கு தர உயர்வு

பெண்கள் 10 மீ வாயு துப்பாக்கி 0.177 போட்டி மூலம் இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் பொட்டித்தொடருக்கு தகுதி பெற்று இலங்கை கடற்படைக்கும் நாட்டிற்கும் மகத்தான புகழ் கொண்டு வந்த இலங்கை கடற்படையில் பணியாற்றும் பெண் மாலுமியான டெஹானி எகொடவெலவுக்கு தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவினால் ரூ. 250,000.00 பெறுமதிவாய்ந்த நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக, மிகுந்த அர்ப்பணிப்புடனும், தைரியத்துடனும், மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக பல வெற்றிகளைப் பெற்று நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற கடற்படை பெண் மாலுமி டெஹானி எகொடவெலவின் அர்ப்பணிப்பு மற்றும் திறனை கடற்படைத் தளபதி குறிப்பாக பாராட்டினார். மேலும் கடற்படையின் மற்றும் நாட்டின் பெருமை மேம்படுத்தும் வகையில் ஒரு ஒலிம்பிக் பதக்கத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான வாழ்த்துகளை தெரிவித்த கடற்படைத் தளபதி இன்று கடற்படை தலைமையகத்தில் வைத்து டெஹானி எகொடவெலவுக்கு ரூ. 250,000.00 பெறுமதிவாய்ந்த நிதியுதவியும்

வழங்கினார். குறித்த நிகழ்வு விளையாட்டு விதிகளுக்குட்பட்டு கொவிட் - 19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழகாட்டுதலுக்கமைய பயோ பாதுகாப்பு முன்னுரிமை முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2006 இல் கடற்படையில் சேர்ந்த டெஹானி எகொடவெல 2011 முதல் கடற்படை படப்பிடிப்பு அணியை பிரதிநிதித்துவப்படுத்திகிறார். 2012 முதல் தேசிய படப்பிடிப்பு அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு (07) முறை இலங்கையின் சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கணியாக மற்றும் பல வெளிநாட்டு போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்தி பங்கேற்று சிறந்த திறமையைக் காட்டியுள்ளார். 2018 முதல் மகளிர் 10 மீ வாயு துப்பாக்கி 0.177 போட்டியில் இலங்கை சாதனையை படைத்துள்ள இவர், 2019 முதல் பெண்கள் சகலதுறை 50 மீ துப்பாக்கி 0.22 இல் இலங்கை சாதனையையும் படைத்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு இந்தியாவில் மற்றும் 2019 ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 50 மீ துப்பாக்கி 0.22 அணி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், 2019 ஆம் ஆண்டில் கட்டாரில் நடைபெற்ற மகளிர் 50 மீ துப்பாக்கி 0.22 போட்டியில் இலங்கை சாதனை படைத்தார். அவரது சிறந்த செயல்திறன் காரணமாக, உலக தரவரிசையில் மகளிர் 10 மீ வாயு துப்பாக்கி 0.177 என்ற போட்டியில் முன்னிலை வகித்த காரணத்தினால் இவ்வாரு டோக்கியோ ஒலிம்பிக் பொட்டித்தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டித்தொடரில் பங்கேற்க ஜப்பானுக்கு புறப்படும் தோஹானி எகோடவேல, கடற்படைக்கும் நாட்டிற்கும் மரியாதை செலுத்தும் வகையில் பெண்கள் துப்பாக்கி போட்டியில் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று இலங்கைக்கு கொண்டு வருவார் என்று உலகெங்கிலும் உள்ள அனைத்து இலங்கையர்களும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.