கடற்படையின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட தம்புள்ளை வீர மொஹான் ஜயமஹ கல்லூரியின் வசதிகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கடற்படையின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட மத்திய மாகாணத்தின் தம்புள்ளை, கலேவெல வீர மோகன் ஜயமஹா மகா வித்தியாலயத்தின் வசதிகள் 2021 நவம்பர் 05 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவின் தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையின் 70வது ஆண்டு நிறைவுக்கு சமாந்தரமாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்துவதுக்கு, ஒவ்வொரு கடற்படைக் கட்டளையிலும் சில பின்தங்கிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதில் கடற்படை அடியெடுத்து வைத்துள்ளது. எனவே, நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதற்கான இந்த முயற்சி 19 ஏப்ரல் 2021 அன்று தொடங்கியது.

இதன்படி, இந்த சமூகப் பணித் திட்டத்தின் கீழ், வீர மோகன் ஜயமஹா வித்தியாலயத்தின் அனைத்துக் கட்டிடங்களையும் பழுதுபார்த்து வர்ணம் பூசுவது, மாணவர்களின் பாதுகாப்பிற்கு அவசியமான கல்லூரியின் பக்கவாட்டைப் பூர்த்தி செய்வது மற்றும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்ப்பதற்காக அதிநவீன கூடைப்பந்து மைதானத்தை நிர்மாணிப்பதற்கும், பாடசாலை வளாகத்தின் அலங்காரத்தை கவர்ச்சிகரமான முறையில் நிறைவு செய்வதற்கும் வட மத்திய கடற்படைக் கட்டளையின் கடற்படையினர் பங்களித்தனர்.

மேலும், வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரால் அபிவிருத்தி செய்யப்பட்ட இப்பாடசாலை திறப்பு விழாவில் வருடத்தின் சிறந்த மாணவிக்கான ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணமும், கடற்படை மூலம் வழங்கப்படுகின்ற பணப்பரிசும் வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதிவினால் மாணவி ஜானகி அனுராதாவிடம் வழங்கப்பட்டது.

கலேவெல வலயக் கல்விப் பணிப்பாளர், திருமதி சுஜீவா வீரசுந்தர மற்றும் பாடசாலையின் அதிபர் திரு யு.எஸ்.ஏ. பண்டார லீலாரத்ன ஆகியோர் உரையாற்றியபோது, கடற்படையின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வீர மோகன் ஜயமஹா வித்தியாலயத்தில் மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகளைப் பாராட்டியதுடன் கடற்படைத் தளபதி மற்றும் அனைத்து கடற்படை வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும், இந்த பாடசாலையில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கலேவெல கல்வி வலயத்திற்கு ஒரு பெரிய விஷயம் என்று அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

மேலும், அனைத்து மாலுமிகளும் தானாக முன்வந்து தங்களின் மாதாந்திர சம்பளத்தில் இருந்து அளித்துள்ள நிதியுதவியால் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்ற இந்த சமூக பணி திட்டத்தின் கீழ் தற்போது மேற்கு, கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய கட்டளைகளில் அபிவிருத்தி செய்யப்பட்ட வசதிகள் குறைவான 06 பாடசாலைகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் தெற்கு கடற்படை கட்டளையினால் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் இரண்டு (02) பாடசாலைகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுகாதார வழிகாட்டுதலுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலேவெல வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜீவா வீரசுந்தர, தம்புள்ளை பிரதேச கல்விப் பணிப்பாளர் திருமதி ஐ.டபிள்யூ.கே. ரணதுங்க, கடற்படை சேவா வனிதா செயற்குழு உறுப்பினர் மற்றும் வடமத்திய கடற்படைத் தளபதியின் துணைவியார் திருமதி ஜானகி சேனாரத்ன, வடமத்திய கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் நிலந்த ஹேவாவிதாரண, இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் ரோஹான் திஸாநாயக்க, வீர மொஹான் ஜயமஹ மகா வித்தியாலயத்தின் அதிபர் யூ.எஸ்.ஏ பண்டார லீலாரத்ன அவர்கள் உட்பட குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.