போர்வீரர்கள் ஞாபகார்த்த தினம் மற்றும் பொப்பி மலர் விழா -2021 விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் இடம்பெற்றது

தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து போர் வீரர்களும் நினைவுகூறும் போர்வீரர்கள் ஞாபகார்த்த தினம் மற்றும் பொப்பி மலர் விழாவின் -2021 பிரதான விழா கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் இன்று ( 2021 நவம்பர்,14) நடைபெற்றதுடன் இந் விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இந் நிகவுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளதுடன் தற்போது தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து போர் வீரர்களும் நினைவுகூறி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் போர் வீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

அதன் படி, இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவு கூரும் நிகழ்ச்சியில் தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து போர் வீரர்களும் நினைவுகூறி இரண்டு நிமிடம் மவுனம் செலுத்தப்பட்டது. அதன்பிறகு பாதுகாப்பு செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி உட்பட முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் போர் வீரர்களின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தாய்நாட்டின் உன்னத சுதந்திரத்திற்காக தம் உயிர்களை தியாகம் செய்து நம் அனைவரினதும் பூரண கடமையை நிறைவேற்றிய அனைத்து போர்வீரர்களையும் நினைவுகூரும் வகையில் இந்த புகழ்பெற்ற போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

மேலும், தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்ட போர்வீரர்களின் நினைவேந்தல் பிரதான விழாவிற்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் (ஓய்வு) ஜயநாத் கொலம்பகே, , இலங்கை விமானப்படைத் தளபதி, ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், போர்வீரர்களை நினைவுகூரும் பிரதான விழாவுக்கு இனையாக கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்ற நினைவுகூரும் விழாவுக்காக கடற்படை துனை தளபதி ரியர் அட்மிரல் வய்.என் ஜயரத்னவின் தலைமையில் இடம்பெற்றதுடன் அனைத்து கடற்படை கட்டளைகளில் தளபதிகளின் மற்றும் நிருவனங்களில், கப்பல்களின் தளபதிகள் ஆகியோரின் ஆதரவின் கீழ் நினைவு விழாக்கள் நடத்தப்பட்டன. கடற்படைக் கப்பல்கள், நிறுவனங்கள் மற்றும் பீரங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.


கடற்படை தலைமையகம்


மேற்கு கடற்படை கட்டளை


கிழக்கு கடற்படை கட்டளை


வடக்கு கடற்படை கட்டளை


வட மத்திய கடற்படை கட்டளை


வடமேற்கு கடற்படை கட்டளை


தெற்கு கடற்படை கட்டளை


தென் கிழக்கு கடற்படை கட்டளை