கடற்படை பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது

வெலிசர கடற்படை வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட ஒரு ICU Ventilator இயந்திரம் மற்றும் இரண்டு Digital BP Monitor இயந்திரங்கள் (02) கொமான்டர் (ஓய்வு) எல்.பீ.கே ஹேவகேவினால் குறித்த வைத்தியசாலைக்கு வழங்கவதுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் அடையாளமாக ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (2022 ஜனவரி 05) கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள கோவிட் நிவாரண நிதியை நிர்வகித்து வரும் இலங்கை உயிரியல் மருத்துவப் பொறியியலாளர் ஜகத் ஹெட்டியாராச்சி அவர்களினால் கடற்படை பொது வைத்தியசாலையில் உள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மற்றும் குறித்த பிரிவின் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட இந்த மருத்துவ உபகரணங்கள் கொமான்டர் (ஓய்வு) எல்.பீ.கே ஹேவகேவினால் குறித்த வைத்தியசாலைக்கு வழங்கவதுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் அடையாளமாக ஒப்படைக்கும் நிகழ்வு இன்று கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்காக கடற்படையின் பிரதி பணிப்பாளர் நாயகம், பொது சுகாதார சேவைகள் கொமடோர் (மருத்துவம்) பிஜேபி மாரம்பே அவர்களும் கலந்துகொண்டார்.