கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்

வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன 2022 ஜனவரி 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் வடக்கு கடற்படை கட்டளையின் செயற்பாட்டுத் தயார்நிலை மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை மேற்பார்வையிட்டார்.

அதன்படி, 2022 ஜனவரி 08 ஆம் திகதி வடக்கு கடற்படைக் கட்டளையின் கீழ் உள்ள வெத்தலக்கேணி கடற்படைத் தளத்திற்கு வந்த கடற்படைத் தளபதி அதன் செயல்பாட்டுத் தயார்நிலை, நிர்வாகம் மற்றும் கடற்படை நலன்புரி வசதிகளை மேற்பார்வையிட்டார். வெத்தலக்கேணி கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் செயற்திறனை மேம்படுத்துவது தொடர்பாக கடற்படையினருக்கு பணிப்புரை வழங்கியதுடன், நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் மரக்கன்றுகளையும் நட்டார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கடற்படைத் தளபதி 2022 ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரைக்கு மரியாதை செலுத்தியதோடு, நயினாதீவு ரஜமஹ விஹாரயத்தின் தளபதி, வடக்கு இலங்கையின் தலைமை சங்கநாயக்க வண, நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயகத் தேர்ரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார். அதன் பின் வடக்கு கடற்படை கட்டளையின் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவன வளாகத்தில் அதிநவீன பல்நோக்கு செயற்பாட்டு அறையொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.

மேலும், வடக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகளை மற்றும் மாலுமிகளை உரையாற்றிய கடற்படைத் தளபதி, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கட்டளையின் வினைத்திறன் மற்றும் வினைத்திறனான செயற்பாட்டிற்கு பங்களித்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகளை பாராட்டினார். எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் கடற்படையானது அதிகபட்ச செயற்திறனை பேண வேண்டுமென கடற்படை எதிர்பார்ப்பதாக தெரிவித்த கடற்படைத் தளபதி, அனைத்து கடற்படையினரும் தமது கடமைகளை மிகவும் ஒழுக்கத்துடனும், சீரான கடமையுடனும், தனிப்பட்ட வாழ்க்கையுடனும், தெளிவான மனதுடன் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட மாலுமிகள் பிரிவுகளின் முறையான ஒழுங்கைப் பேணுவதுடன், இளைய மாலுமிகளின் பிரச்சினைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறிய கடற்படை தளபதி, சிரேஷ்ட மாலுமிகளுக்கு இதில் பெரும் பொறுப்பு இருப்பதாகவும் வலியுறுத்தினார். கடற்படையின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான சரியான உடல் தகுதியைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கடற்படைத் தளபதி மேலும் வலியுறுத்தினார்.

மேலும், வடக்கு கடற்படை கட்டளையின் கொமடோர் வழங்கல் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயற்பாடுகளை எளிதாகவும் திறமையாகவும் செய்யும் நோக்கத்துடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட நிர்வாகக் கட்டிடத்தை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் திறந்து வைத்த கடற்படைத் தளபதி குறுகிய காலத்தில் திட்டத்தை முடித்ததற்காக கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள கடற்படை வீரர்களைப் பாராட்டினார்.

தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்காக வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா, வழங்கல் மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் நிஷாந்த டி சில்வா, கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் சுஜிவ செனவிரத்ன, வடக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேரா, கடற்படையின் கட்டளை அதிகாரி (தீவுகள்) கொமடோர் ஹென்ஸ்லி பீரிஸ் உடபட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட மாலுமிகள் கலந்து கொண்டனர்.