இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாமிற்கு இணையாக கரையோர சுத்திகரிப்பு திட்ட மொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாமுடன் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்ட கரையோர சுத்திகரிப்பு நிகழ்ச்சியொன்று 2022 ஜனவரி 9 ஆம் திகதி உஸ்வெடகையாவ கடற்கரையில் நடத்தப்பட்டது.

பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திண்மக் கழிவுகள் கடலில் கொட்டப்படுவதைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படையினர் கரையோர சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்களிப்புச் செய்து வருகின்றனர். அதன்படி, இலங்கை தொண்டர் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2022 ஆம் ஆண்டிற்கான தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாமுடன் இணைந்து பயிற்சி முகாமில் பங்குகொள்ளும் மாலுமிகளின் பங்கேற்புடன் இந்த கடற்கரை சுத்திகரிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு உஸ்வெடகையாவ கடற்கரையில் இருந்து அதிகளவான பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திண்மக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்த கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மேலும் இதுபோன்ற சூழல் நட்பு திட்டங்களுக்கு கடற்படை தொடர்ந்து பங்களிப்பை வழங்கும்.