இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பங்களாதேஷ் கடற்படை தளபதி இலங்கை விட்டு புறப்பட்டார்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் கடற்படை தளபதி அட்மிரல் எம் ஷஹீன் இக்பால் (Admiral, M Shaheen Iqbal) அவர்கள் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று காலை (2022 ஜனவரி 23) இலங்கை விட்டு புறப்பட்டார்.

பங்களாதேஷ் கடற்படைத் தளபதி, இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்புச் செயலாளர் ஜேனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் கௌரவ. பிரதமர், மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்ததுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பாக அவர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்த விஜயத்தின் போது பங்களாதேஷ் கடற்படை தளபதி கிழக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளின் தளபதிகளையும் சந்தித்து திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமிக்கு விஜயம் செய்து பயிற்சியாளர்களை உரையாற்றினார்.

மேலும், இந்த விஜயத்துக்காக பங்களாதேஷ் கடற்படைத் தளபதியின் மனைவியும் பங்களாதேஷ் கடற்படையின் குடும்ப நலன்புரிச் சங்கத்தின் தலைவியும்மான திருமதி பெகம் மொனிரா ரௌஷான் இக்பால்,(Mrs. Begum Monira Rowshan Iqbal) அவர்களும் கழந்து கொண்டதுடன் அவர் இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் அழைப்பின் பேரில் கடற்படை சேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்த உத்தியோகபூர்வ விஜயம் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இவ்வாரான உத்தியோகபூர்வ விஜயம்கள் மூலம் இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும். எதிர்காலத்தில் பிராந்திய பொதுவான கடல்சார் சவால்களின் கூட்டு வெற்றிக்கும் இது ஒரு கருவியாக இருக்கும்.