ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறையின் பிரதிநிதிகள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திணைக்களத்தின் சர்வதேச கொள்கைப் பிரிவின் உலகளாவிய நலன்கள் கிளையின் உதவிச் செயலாளர் திரு டொம் மெனடிவு அவர்கள் (Tom Menadue) இன்று (2022 பெப்ரவரி 18) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது கடற்படைத் தளபதி மற்றும் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திணைக்களத்தின் சர்வதேச கொள்கைப் பிரிவின் உலகளாவிய நலன்கள் கிளையின் உதவிச் செயலாளர் ஆகியோர் இருதரப்பு விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடலை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் இயன் கெய்ன் (Ian Cain) மற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தின் சர்வதேச கொள்கைப் பிரிவில் இலங்கை தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மேட் கனிங்ஹாம் (Matt Cunningham) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதி தூதுக்குழு உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.