இந்திய மேற்கு கடற்படைக் கப்பல்கள் குழுவின் கட்டளை கொடி அதிகாரி கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இந்திய கடற்படையின் மேற்கு கப்பல்கள் குழுவின் கட்டளை கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா (Rear Admiral Sameer Saxena, Flag Officer Commanding Western Fleet Indian Navy) இன்று (2022 மார்ச் 10) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

இந்திய கடற்படையின் மேற்கு கப்பல்கள் குழுவின் கொடி கப்பலான Destroyer வகையின் ‘INS Chennai ’ கப்பல் மற்றும் இந்திய கடற்படையின் Frigate வகையின் போர் கப்பலான ‘INS Teg’என்ற கப்பல் இன்று (2022 மார்ச் 10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் குறித்த கப்பல்களை வரவேற்கப்பட்டன. மேலும், இந்தக் கப்பல்களுடன் இந்திய கடற்படையின் மேற்கு கப்பல்கள் குழுவின் கட்டளை கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா (Rear Admiral Sameer Saxena, Flag Officer Commanding Western Fleet Indian Navy) அவர்களும் இலங்கைக்கு வந்துள்ளார்.

இவ்வாறு இலங்கைக்கு வந்துள்ள இந்திய கடற்படையின் மேற்கு கப்பல்கள் குழுவின் கட்டளை கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோருக்கிடையில் இன்று (2022 மார்ச் 10) கடற்படைத் தலைமையகத்தில் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகள் பரிமாற்றமும் இடம்பெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட் (Captain Vikas Sood) அவர்களும் கலந்துகொண்டார்.

குறித்த இந்திய கப்பல்கள் தீவில் தங்கியிருக்கும் போது, இலங்கை கடற்படையுடன் இணைந்து பல கடற்படை பயிற்சிகளில் ஈடுபட உள்ளன. மேலும், இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, இரண்டு கப்பல்களும் மார்ச் 12 ஆம் திகதி தீவை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கப்பல்கள் தொடர்பான நடவடிக்கைகள் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்படுகின்றன.