ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன இன்று (2022 மார்ச் 11) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1987 ஆம் ஆண்டில் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 05 வது ஆட்சேர்ப்பின் கேடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன, தனது பதவிக் காலத்தில் பல்வேறு கப்பல்களில் மற்றும் நிறுவனங்களில் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார். மேலும், அவர் வெலிசர கடற்படை வளாகத்தின் கடற்படை கட்டளை அதிகாரி, துணை இயக்குனர் கடற்படை செயல்பாடுகள், துணை இயக்குனர் கடல்சார் சிறப்பு படைகள், துணை இயக்குனர் கடற்படை கடல் கண்காணிப்பு, கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தலைவர், துணை தளபதி வட மத்திய கடற்படை கட்டளை, உதவி இயக்குனர் கடற்படை கொள்கை மற்றும் திட்டமிடல், பிரதித் தளபதி வடக்கு கடற்படை கட்டளை மற்றும் காங்கேசன்துறை துறைமுக வசதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரி, மேற்கு கடற்படை கட்டளை மற்றும் கொழும்பு துறைமுக வசதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரி, பணிப்பாளர் நாயகம் நிர்வாகம், வடமேற்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளின் தளபதி ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தார்.