கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா, குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களின் பங்குபற்றலுடன் நிறைவடைந்தது

கத்தோலிக்கர்கள் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் பூஜை வழிபாடுகள் நடத்துகின்ற இந்திய - இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா இன்று (2022 மார்ச் 12) வெற்றிகரமான குறிப்பில் நிறைவடைந்தது. அதன்படி குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இம்முறை திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான வசதிகள் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டன.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி குறைந்த எண்ணிக்கையிலான இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இவ்விழாவின் பிரதான ஆராதனையை யாழ் மறைமாவட்டப் பொறுப்பாளர் அருட்தந்தை ஜோசப் ஜெபரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் இதுக்காக இந்தியா மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் வருடாந்த கச்சத்தீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் மேற்பார்வையில் யாழ்.மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது. கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், சுகாதாரம், தற்காலிக சாலைகள், இறங்குதுறைகள், மின் வசதிகள், பக்தர்களின் பாதுகாப்புக்காக உயிர்காக்கும் காவலர்கள், மருத்துவ வசதிகள் போன்றவற்றில் மருத்துவர்கள் குழு ஆகிய வசதிகள் கடற்படையால் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வுக்காக பிராந்தியத்தின் அரசியல் பிரதிநிதிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி, முப்படை மற்றும் காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.