இந்திய கடற்படை கப்பல்கள் தீவை விட்டு புறப்பட்டுள்ளது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 மார்ச் 10 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் மேற்கு கப்பல்கள் குழுவின் கொடி கப்பலான Destroyer வகையின் ‘INS Chennai ’ மற்றும் இந்திய கடற்படையின் Frigate வகையின் போர் கப்பலான ‘INS Teg’என்ற கப்பல்கள் இன்று (2022 மார்ச் 12) தீவை விட்டு புறப்பட்டுள்ளது.

அதன்படி, புறப்பட்ட இந்திய கடற்படைக் கப்பல்களுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை வழங்கியதுடன், ‘INS Chennai’ மற்றும் ‘INS Teg’ ஆகிய கப்பல்கள் இலங்கை விட்டு புறப்படும் போது இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலவுடன் இணைந்து கடற்படை பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அங்கு, கப்பல்கள் கடலில் சரக்கு மற்றும் எரிபொருளை அணுகுதல் மற்றும் கப்பல்களின் தற்காப்புக் கோடுகளில் செல்லுதல் போன்ற பல கடற்படை பயிற்சிகளில் ஈடுபட்டன.

இக்கப்பல்கள் தீவில் தங்கியிருந்த காலத்தில், இரு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்கும், புதிய அறிவு மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்கும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியது.

மேலும், இந்த விஜயத்தின் போது இந்திய கடற்படையால் இலங்கை கடற்படை படகோட்டம் அணிக்கு தேவையான பல உபகரணங்களை நன்கொடையாக வழங்கப்பட்டதுடன் குறித்த உபகரணங்கள் இந்திய கடற்படையின் மேற்கு கப்பல்கள் குழுவின் கட்டளை கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா (Rear Admiral Sameer Saxena, Flag Officer Commanding Western Fleet Indian Navy) அவர்களால் இன்று (2022 மார்ச் 12) காலை, ‘INS Chennai’ கப்பலில் வைத்து இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம், நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரசன்ன மகாவிதானவிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.