சர்வதேச மகளிர் தினத்திற்கான சிறப்பு இசை நிகழ்ச்சி

மார்ச் 08 ஆம் திகதி ஈடுபட்டுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவினால் மகளிர் தின கொண்டாட்டத் திட்டமொன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் 2022 மார்ச் 15 ஆம் திகதி அட்மிரல் சோமதிலக திஸாநாயக்க கேட்போர்கூட்டத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

2022 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கான ஐக்கிய நாடுகளின் கருப்பொருள் "நிலையான நாளைக்கான பாலின சமத்துவம்".(Gender equality today for sustainable tomorrow) ஆகும். உலகெங்கிலும் உள்ள பெண்கள் வெவ்வேறு காலங்களில் போர்களின் போது முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதற்கு வரலாறு சாட்சியமளிக்கிறது. சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டைப் பீடித்திருந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கை மேற்கொண்ட மனிதாபிமான முயற்சிகளின் போது, பெண் அதிகாரிகள் மற்றும் பெண் மாலுமிகள், ஒரு பெண் என்ற வகையில் தங்களின் சமூகப் பொறுப்பை நிறைவேற்றும் அதே வேளையில், மிகுந்த தைரியத்துடனும், உறுதியுடனும் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றினர். இந்த சிறப்பு இசை நிகழ்ச்சி மூலம் சமூக மற்றும் உத்தியோகபூர்வ பொறுப்புகளை சமநிலைப்படுத்தும் முக்கியஸ்தர்கள் மற்றும் உயரதிகாரிகளின் மறைந்திருக்கும் கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கியது.

பெண் அதிகாரிகளின் மற்றும் பெண் மாலுமிகளின் பாட்டு மற்றும் நடன அம்சங்களால் அலங்காரமான இந்த நிகழ்சிக்கு இனையாக கைவினைப்பொருட்கள், தையல்கள் மற்றும் ஓவியங்கள் கண்காட்சியொன்றும் இடம்பெற்றதுடன் அது மூலம் அவர்களின் திறன்களை வெளிப்படுத்தப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு இசை நிகழ்ச்சி மற்றும் படைப்பு கண்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்காக கடற்படை தளபதி மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவ தலைவி அவர்கள் ஏற்பாட்டுக் குழு, பெண் அதிகாரிகள் மற்றும் பெண் மாலுமிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கடற்படையின் துனை பிரதானி, ரியர் அட்மிரல் வைய்.என்.ஜயரத்ன, பிரதிப் பிரதானி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா, பணிப்பாளர் நாயகங்கள், கடற்படை சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள், கொடி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், பெண் அதிகாரிகள் மற்றும் பெண் மாலுமிகள் கலந்து கொண்டனர்.