நயினாதீவு ரஜமஹா விஹாரயத்தின் பூஜை பூமி சன்னஸ் பத்திரம் கௌரவ பிரதமரின் தலைமையில் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண பண்டைய நயினாதீவு ராஜமஹா விஹாரையை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 2022 மார்ச் 19 ஆம் திகதி நயினாதீவு பண்டைய ரஜமஹா விகாரையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கழந்து கொண்டார்.

இதன்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப புராண ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் மற்றும் கடற்படைத் தளபதி அமரபுர மகா சங்க சபையின் தலைவர், சூளகந்தி மகா நிகாயவின் பிரதமகுரு வண. கங்துனே அஸ்ஸஜி மகா சங்க தேரர் மற்றும் நயினாதீவு பண்டைய ராஜா மகா விஹாராயாவின் பிரதமகுரு சந்தித்து ஆசிர்வாதம் பெற்றதுடன் நயினாதீவு பண்டைய ராஜா மகா விஹாராயத்துக்கு மரியாதையும் செலுத்தினர். அதன் பின் நயினாதீவு ரஜமஹா விஹாரயத்தின் பூஜை பூமி சன்னஸ் பத்திரம் கௌரவ பிரதமரினால் நயினாதீவு பண்டைய ராஜா மகா விஹாராயாவின் பிரதமகுரு கௌரவ பேராசிரியர் நவதகல பதுமகித்தி திஸ்ஸ சங்கத்தேரரிடம் வழங்கப்பட்டது.

அமரபுர மகா சங்க சபையின் தலைமையின் கீழ், நடைபெற்ற பூஜை பூமி சன்னஸ் பத்திரம் வழங்கள் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த நிகழ்வுக்காக வருகைதந்த வணக்கத்திற்குரிய மகாசங்கத்தினர், பிரதம அதிதிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பக்தர்களை பாதுகாப்பாக கடல் மார்க்கமாக கொண்டு செல்ல கடற்படை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக கடற்படை விசேட வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது, நாகதீப புராண ராஜ மகா விகாரை மற்றும் கோவில் அமைந்துள்ள நயினாதீவின் பாதுகாப்பிற்காக கடற்படை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது, எதிர்காலத்தில் இந்தப் புனிதப் பகுதிக்கும் வடக்குத் தீவுகளுக்கும் தேவையான பாதுகாப்பை நிறைவேற்ற கடற்படை உறுதிபூண்டுள்ளது.

தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்காக மகாசங்கத்தினர், அமைச்சர்கள், அரச அதிகாரிகள், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி உட்பட முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.