அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல்கள் குழுவின் துணைத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல்கள் குழுவின் துணைத் தளபதி ரியர் அட்மிரல் ராபர்ட் டி. கிளார்க் (Reserve Deputy Commander, Seventh Fleet Rear Admiral Robert T. Clark) தலைமையிலான அமெரிக்கக் கடற்படைக் குழு இன்று (2022 மார்ச் 21) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தனர்.

இலங்கை கடற்படை மற்றும் ஐக்கிய அமெரிக்க கடற்படை இடையே நடைபெறவிருக்கும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையில் (03rd Navy to Navy Staff Talks SLN – USN) கலந்து கொள்ள வந்த அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல்கள் குழுவின் துணைத் தளபதி தலைமையிலான அமெரிக்கக் கடற்படைக் குழு மற்றும் கடற்படைத் தளபதி இடையிலான இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல்கள் குழுவின் துணைத் தளபதி உட்பட வருகை தந்த தூதுக்குழுவிற்கு கடற்படைத் தளபதியால் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.