பானம அரசு தமிழ் பாடசாலைக்கு கடற்படையினரால் கணினியொன்று வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பானம அரசு தமிழ் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டிற்காக கணினி ஒன்று அன்பளிப்பு தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மகிந்த மஹவத்தவின் தலைமையில் 2022 மார்ச் 24 ஆம் திகதி நடைபெற்றது.

நாட்டிலுள்ள பின்தங்கிய பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள கடற்படை சமூகப் பணித் திட்டத்தினால் இந்த மகத்தான செயலுக்கு அனுசரணை வழங்கப்பட்டுள்ளதுடன் பானம அரசு தமிழ் பாடசாலையின் அதிபர் திரு.ஜி.பரிமளகாந்தன் அவர்கள், மாணவர்களின் கணினித் திறனை மேம்படுத்தும் இந்த சமூக சேவைக்காக கடற்படையினரைப் பாராட்டினார்.

மேலும், இந்நிகழ்வுக்காக பானம அரசு தமிழ் பாடசாலையின் அதிபர் உட்பட மாணவர்கள், இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தின் கட்டளை அதிகாரி மற்றும் கடற்படையினர் பலரும் கலந்துகொண்டனர்.