தேசிய விவசாய வீட்டுத்தோட்ட மேம்பாட்டுத் திட்டமான ‘ஹரித தெயக்’ - 2022 கடற்படையில் செயல்படுத்தப்பட்டது

தேசிய விவசாய வீட்டுத்தோட்ட அபிவிருத்தித் திட்டமான ‘ஹரித தெயக்’ – 2022 உடன் இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2022 மார்ச் 29) கடற்படைத் தலைமையகத்தில் மரக்கன்றுகளை நட்டு இலங்கை கடற்படையில் தேசிய விவசாய வீட்டுத்தோட்ட அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

தேசியக் கொள்கையாக உள்ளூர் உணவு உற்பத்தியை மேம்படுத்துவதில் மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் தேசிய விவசாய வீட்டுத்தோட்ட அபிவிருத்தித் திட்டம் -2022 இன்று (2022 மார்ச் 29) தொடங்கப்பட்டதுடன் இதற்கிணங்க, கடற்படைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி இந்த வீட்டுத்தோட்டம் திட்டத்தை கடற்படையினர் இன்று ஆரம்பித்துள்ளனர்.