கிழக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக இடம்பெற்ற இரத்த தானம் நிகழ்ச்சி

இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு இரத்ததான முகாம் 2022 ஏப்ரல் 30 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறை தளத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரையின் பேரில், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்னவின் வழிகாட்டலின் கீழ் திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்த மாற்று நிலையத்தில் முறையான இரத்த இருப்புக்களை பேண வேண்டியதன் அவசியத்தை கருத்திற்கொண்டு இந்த இரத்தம் வழங்கும் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டதுடன் இந்த மகத்தான நோக்கத்திற்கு ஆதரவாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை கப்பல்துறையில் உள்ள அனைத்து கப்பல்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து ஏராளமான மாலுமிகள் தானாக முன்வந்து இரத்தம் வழங்கினர்.

கிழக்கு கடற்படை கட்டளையின் பதில் கொமடோர் சுகாதார அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த இரத்த தான நிகழ்ச்சிக்காக கடற்படை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் சார்பாக விசேட வைத்திய நிபுணர் திருமதி ஷீனா ஷனூஸ் அவர்கள் உட்பட வைத்தியசாலையின் பணியாளர்கள் பங்களிப்பு வழங்கினர்.