கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சியை பூர்த்தி செய்த 16 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

வெலிசறை கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் 18வது தொழில்நுட்ப பாடநெறியை வெற்றிகரமாக முடித்த தொழில்நுட்ப பிரிவில் 16 மாலுமிகளின் வெளியேறல் அணிவகுப்பு இன்று (2022 மே 11) வெலிசறை கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்படி, மூன்று வருடங்களாக (03) வெலிசர கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் கடற்படை தொழில்நுட்ப பாடநெறியை வெற்றிகரமாக முடித்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமாவிற்கு (National Diploma in Technology - NDT) தகுதி பெற்ற 16 மாலுமிகள் இவ்வாரு வெளியேறி சென்றனர். பயிற்சி காலத்தில் சிறந்து விளங்கிய மாலுமிகளுக்கு அவர்களின் செயற்திறனைப் பாராட்டி பிரதம அதிதியால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதன்படி, கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் 18வது கடற்படை ஆட்சேர்ப்பில் சகல பாடங்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை பயிற்சி கடற்படை வீரர் டி.டி.டபிள்யூ.மென்டிஸ் பெற்றுள்ளார். மின் பொறியியல் பிரிவில் அதிக புள்ளிகளை பெற்ற கடற்படை வீரராகவும், சிறந்த விளையாட்டு மாலுமியாகவும் சிறந்த துப்பக்கியாளருக்கான விருதையும் டி.எம்.கே.டி. பண்டார பெற்றுள்ளார். வாகன பொறியியல் துறையில் அதிக புள்ளிகளை பெற்ற கடற்படை வீரராகவும், சிறந்த பயிற்சி மாலுமியாகவும் ஐ.ஜே.ஆர். முத்துபிரசாத் பெற்றுள்ளார். கப்பல் பொறியியல் துறையில் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை ஏ.ஆர்.தனஜய பெற்றுள்ளார்.

கடற்படை இசைக்குழு மற்றும் கலாச்சார குழுவினர் வழங்கிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் குறித்த அணிவகுப்பு மிகவும் வண்ணமயமானது. இந்த நிகழ்வில் மேற்கு கடற்படை கட்டளை மற்றும் வெலிசர கடற்படை வளாகத்தின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.