ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்படும் திறன் வளர்ப்பு பயிற்சி திட்டம் கடற்படை தலைமையகத்தில் தொடங்குகிறது

ஐரோப்பிய ஒன்றியத்தின், விரிவான இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆபத்தான கடல் வழித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் (Critical Maritime Route Wider Indian Ocean – CRIMARIO II) கீழ் இந்திய-பசிபிக் பிராந்திய தகவல் பகிர்வு திட்டம் (Indo-Pacific Regional Information Sharing - IORIS) மூலம் கடற்படை தலைமையகம் மற்றும் கடற்படை கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 பணியாளர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் 2022 ஜூன் 06 ஆம் திகதி கொழும்பு கலங்கரை விளக்க உணவகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சித் திட்டத்திற்கு இணையாக, CRIMARIO திட்டப் பணிப்பாளர் மார்டின் காஉசி இந்க்லொட் அவர்கள் (Martin Cauchi Inglott) உட்பட பிரதிநிதிகள் குழுவினர் CRIMARIO II திட்டத்துக்காக இலங்கைக்கு மற்றும் இந்தியப் பெருங்கடல் பிரதேச (IORA) அரசாங்கங்களின் சிறப்பு ஆலோசகர் அட்மிரல் (ஓய்வு) பியல் டி சில்வாவின் தலைமையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை 2022 மே 27ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார். அங்கு, குறித்த திட்டம் தொடர்பான இருதரப்பு விவகாரங்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டதுடன், நிகழ்வைக் குறிக்கும் வகையில் CRIMARIO திட்டத்தின் பணிப்பாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கு இடையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகள் பெருங்கடல் பகுதிகளுக்கு இடையே கடல்சார் கள விழிப்புணர்வு (Maritime Domain Awareness – MDA) மற்றும் தகவல் பரிமாற்ற பொறிமுறையில் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் திட்டத்தின் முதல் கட்டம் (CRIMARIO I) 2015 இல் தொடங்கப்பட்டது. 2020-2024 க்குள் செயல்பாட்டுக்கு வரும் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கு விரிவுபடுத்தப்படும், மேலும் கடல்சார் சட்ட அமலாக்கத்தில் கடல்சார் நாடுகளுடன் ஒருங்கிணைக்கும்.