இலங்கை கடற்படை உலக நீரியல் தினத்தை கொண்டாடுகிறது

2022 ஜூன் 21 ஆம் திகதி ஈடுபட்டுள்ள 101 வது உலக நீரியல் தினத்திற்கு இணையாக இலங்கை கடற்படையின் உலக நீரியல் தின கொண்டாட்டம் கடற்படையின் தலைமை அதிகாரி, கடற்படை மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நீரியல் துறை தலைவர் ரியர் அட்மிரல் வை.என். ஜெயரத்னவின் தலைமையில் மற்றும் நீரியல் சேவையில் ஏனைய கட்சிகளின் பங்களிப்புடன் இன்று (ஜூன் 21) தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவரகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சர்வதேச நீரியல் தினம், 2005 இல் ஐக்கிய நாடுகளின் சாசனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று இது கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியில் நீரியல் செயற்பாடுகள் பற்றிய தகவல்களைப் பரப்புவதும், அதனைப் பகிரங்கப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும், மேலும் இந்த ஆண்டு உலக நீரியல் தினத்தின் கருப்பொருள் "ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் தசாப்தத்திற்கு பங்களிப்பு" என்பதாகும்.

கப்பல் போக்குவரத்து, துறைமுக கட்டுமானம், ஆழ்கடல் ஆய்வு, சுற்றுச்சூழல் திட்டமிடல் செயல்படுத்தல், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச கடல் எல்லை நிர்ணயம் போன்ற மேம்பட்ட செயல்திறனுக்கான சமீபத்திய மற்றும் துல்லியமான நீரியல் தரவை வழங்குவதன் மூலம் நிலையான கடல் மேம்பாடு மற்றும் பயன்பாடு பற்றிய துல்லியமான புரிதலை வழங்குதல் இந்த ஆண்டு உலக நீரியல் தினத்தின் கருப்பொருளாகும்.

மேலும், இந்நிகழ்வில் கடற்படைத் தலைமையகம் மற்றும் இலங்கை கடலோர காவல்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்படை நீரியல் பிரிவைச் சேர்ந்த பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.