கடற்படையின் புதிய பிரதிப் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்

ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா 2022 ஜூன் 21 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் புதிய பிரதி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இது தொடர்பான நியமனக் கடிதத்தை கடற்படைத் தலைமையகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிப் தலைமை அதிகாரிக்கு 2022 ஜூன் மாதம் 21ஆம் திகதி கையளித்தார். கடற்படையின் பிரதிப் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன், வடக்கு கடற்படைத் தளபதியாகவும் அவர் தொடர்ந்து கடமையாற்றுவார்.