கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் தடுப்பூசி திட்டங்களுக்கு கடற்படையின் உதவி

கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்ற சமூகப் பராமரிப்பு மற்றும் சமூக சேவைகளின் மற்றுமொரு படியாக, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் உள்ள பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட COVID-19 தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கை கடற்படையினர் சுகாதாரத் துறைக்கு உதவிகளை வழங்கினர்.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ், திருகோணமலை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் மருத்துவப் பிரிவின் மருத்துவப் பணியாளர்கள் இணைந்து 2022 ஜூன் 08, 09, 10 மற்றும் 15, திகதிகளில் பாடசாலை குழந்தைகளுக்கான கோவிட் 19 தடுப்பூசித் திட்டங்களின் தொடர் தொடங்கப்பட்டது. அதன்படி, திருகோணமலை மெதோதிஸ்த பெண்கள் கல்லூரியில் 56 குழந்தைகளுக்கும், ஸாஹிரா கல்லூரியில் 136 குழந்தைகளுக்கும், புனித மரியா கல்லூரியில் 282 குழந்தைகளுக்கும், ஓர்ஸ்ஹில் விவேகானந்த கல்லூரியில் 300 குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

மேலும், பொதுமக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்கு ஆதரவளிக்க கடற்படை உறுதியாக உள்ளது.