ரியர் அட்மிரல் உபுல் த சில்வா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

கிட்டத்தட்ட 36 ஆண்டுகளான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் உபுல் த சில்வா இன்று (2022 ஜூலை 09) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ரியர் அட்மிரல் உபுல் த சில்வா அவர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாவிடை செலுத்தினர்.

1986 ஆம் ஆண்டில் 15வது கெடட் ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் உபுல் த சில்வா, தனது பதவிக் காலத்தில் இலங்கை கடற்படையின் விரைவுத் தாக்குதல் ரோந்துப் படகுகளின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை கடற்படையின் கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும், அவர் இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவனத்தின் தளபதி, கடற்படை பயிற்சி பிரதி பணிப்பாளர், இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம், கடற்படை சோதனை பிரிவின் பணிப்பாளர், வட மத்திய கடற்படை கட்டளையின் பிரதி தளபதி, பாதுகாப்புப் படைத் தளபதி அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் கடற்படை மற்றும் விமானச் செயற்பாடுகள், பணிப்பாளர் கடற்படை சமிக்ஞைகள், கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி மற்றும் திருகோணமலை துறைமுக வசதி பாதுகாப்பு அதிகாரி, கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளை, தொண்டுழியர் கடற்படையின் தளபதி, பணிப்பாளர் நாயகம் நபர்கள், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி, கடற்படையின் துனை தலைமை அதிகாரி மற்றும் கடற்படையின் தலைமை அதிகாரி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் பணியாற்றிய புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியும் ஆவார்.