மேல் மாகாண 24 வயதுக்குட்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட ரக்பி சாம்பியன்ஷிப் மற்றும் இன்டர்-கிளப் நிப்பான் ரக்பி லீக் கோப்பை கடற்படை வென்றது

மேல் மாகாண 24 வயதுக்குட்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட ரக்பி சாம்பியன்ஷிப் மற்றும் இன்டர்-கிளப் முதல் தர 2021/2022 நிப்பான் பெயிண்ட் ரக்பி கோப்பை கடற்படை ரக்பி அணிகள் வென்றன, மேலும் வெற்றி பெற்ற ரக்பி அணிகளின் தலைவர்கள் ரக்பி கோப்பை இன்று (செப்டம்பர் 21, 2022) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவிடம் வழங்கினார்கள்.

மேல் மாகாண ரக்பி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 24 வயதுக்குட்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட ரக்பி போட்டித்தொடர் 2022 செப்டெம்பர் 11 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் பார்க் ரக்பி மைதானத்தில் நடைபெற்றது. அங்கு திறந்த பிரிவின் கீழ் பீற்றர்சன் றக்பி கழகத்திற்கும் கடற்படை ரக்பி அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் கடற்படை ரக்பி அணி 50-05 என்ற புள்ளிகள் கணக்கில் மேல் மாகாண 24 வயதுக்குட்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட ரக்பி சாம்பியன்ஷிப்பை வென்றது.

மேலும், இலங்கை ரக்பி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2021/2022 Nippon Ink Inter Club Rugby Tournament இன் கோப்பைக்காக இலங்கை கடற்படை, இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை மற்றும் CR & FC ஆகிய முதல் தர ரக்பி அணிகள் போட்டியிட்டன. இந்த அணிகளில், கடற்படை ரக்பி அணி 2021/2022 இன் கிளப் ரக்பி போட்டியின் முதல் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளதுடன் இந்த கோப்பை 2022 செப்டம்பர் 16 அன்று கடற்படை ரக்பி அணிக்கு வழங்கப்பட்டது.

அதன்படி, கடற்படையின் 24 வயதுக்குட்பட்ட ரக்பி அணியின் தலைவர் சப்-லெப்டினன்ட் பி.எச்.ஏபா மற்றும் கடற்படை முதல் வரிசை ரக்பி அணித் தலைவர் கடற்படை வீரர் ஏ.ஈ.வீரதுங்க ஆகியோர் ரக்பி அணிகள் வென்ற கோப்பைகளை கடற்படைத் தளபதியிடம் இன்று (2022 செப்டம்பர் 21) வழங்கினர். இங்கு கடற்படைத் தளபதி கடற்படையினருக்கான சாதனைகளை மதிப்பீடு செய்ததுடன், எதிர்காலத்தில் கடற்படைக்கு மேலும் பல வெற்றிகளைப் பெற்றுத் தருவதற்கு அவர்களை வாழ்த்தினார்.

மேலும், தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கடற்படை விளையாட்டுத் துறையின் உட்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், நிபுணர் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் கடற்படை விளையாட்டு வீரர்களின் நலன்புரி வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான சிறப்புத் திட்டங்கள் இதுக்காக பெரும் பங்களிப்பை அளித்துள்ளது.

இந்த நிகழ்வில் கடற்படை ரக்பி விளையாட்டு சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் நெவில் உபயசிறி, கடற்படை ரக்பி விளையாட்டு சங்கத்தின் தலைவர் கொமடோர் சனத் பிடிகல, கடற்படை ரக்பி விளையாட்டு சங்கத்தின் செயலாளர் கப்டன் துசித அபேசுந்தர உள்ளிட்ட கடற்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.