248 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 238 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 248 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 238 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 அக்டோபர் 22 ஆம் திகதி திருகோணமலை, சாம்பூர் இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

இலங்கை கடற்படைக் கப்பல் விதுர நிறுவனத்தின் கட்டளைத் தளபதி கேப்டன் ரொஹான் திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன இந்த அணிவகுப்புக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிப்படை பயிற்சியின் போது திறன்கள் சிறப்புரையாற்றிய கடற்படை வீரர்களுக்கு கோப்பைகளை வழங்கினார்.

இதன்படி, 248வது ஆட்சேர்ப்பின் சிறந்த கடற்படை வீரருக்கான வெற்றிக்கிண்ணமும், அனைத்து பாடங்களிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற மாலுமிக்கான வெற்றிக்கிண்ணமும், சிறந்த துப்பக்கியாளருக்கான வெற்றிக்கிண்ணமும் கடற்படை வீரர் யு.ஜி.ஆர்.எம். ஜயரத்ன பெற்றுள்ளதுடன் டப்.எம்.எல்.சீ வன்னிநாயக்க சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பெற்றுள்ளார். இதேவேளை, 248 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக ‘’கஜபாகு” பிரிவு தெரிவு செய்யப்பட்டது.

இங்கு அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்த கடற்படையினரை உரையாற்றிய பிரதி கடற்படை தளபதியும் கிழக்கு கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, முதலில் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை ஒழித்து சுதந்திரம் கொண்டுவருவதுக்காக தொழில்நுட்பம் மற்றும் சிறந்த தொழில்சார் திறன்களைக் கொண்ட இராணுவமாக இலங்கை கடற்படை கடல் மற்றும் நிலத்தில் ஆற்றிய பங்கு மிகவும் மதிப்புமிக்கது என்று கூறினார். அவர் மேலும் பேசுகையில், நாம் அனைவரும் அனுபவிக்கும் இந்த உண்மையான சுதந்திரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று தாய்நாட்டின் தேவைகளை நிறைவேற்றும் பாரிய பொறுப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் இருக்கும் பெருமைமிக்க கடற்படையில் சேரும் பயிற்சி மாலுமிகள் பெருமைக்குரிய இலங்கை மகன்களாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், தாய்நாட்டிற்கு சேவையாற்றுவதற்காக தமது மகன்களை கடற்படையினரிடம் ஒப்படைத்த பயிற்சி மாலுமிகளின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்தார்.

மேலும், கடற்படை இசைக்குழு மற்றும் கலாச்சாரக் குழுவின் வண்ணமயமான காட்சியுடன் வெளியேறல் அணிவகுப்பு வண்ணமயமாக இடமபெற்றது. மேலும் கடற்படை மரைன் படையணியின் காட்சிகளும் இடம்பெற்றன.

கௌரவ மகா சங்கத்தினர், கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் மற்றும் வெளியேறும் பயிற்சி மாலுமிகளின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.