இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் பிரதித் தூதுவர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் பிரதித் தூதுவர் திரு. Aurélien Maillet அவர்கள் இன்று (2022 நவம்பர் 03) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் பிரதித் தூதுவர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் கடற்படை தளபதி பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தலைவருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கினார்.

மேலும், இந்த நிகழ்வில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு அதிகாரியும் கலந்துகொண்டார்.