72 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இந்து மத நிகழ்ச்சி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது

2022 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 72 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் மத நிகழ்ச்சிகளின் இந்து மத நிகழ்ச்சி இன்று (2022 டிசம்பர் 01) கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் இந்து ஆலயத்தில் நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் பெருமைக்குரிய 72வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் பல சமய நிகழ்வுகள் கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சமய நிகழ்ச்சிகள் தொடரின் ஆரம்பமாக, கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வு ருவன்வெலி மஹா சேய அருகில் மற்றும் ஜய ஸ்ரீ மஹா போதிய அருகில் 2022 நவம்பர் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெற்றதுடன், கிறிஸ்துவ சமய வழிபாடுகள் புனித லுசியா தேவாலயத்தில் நவம்பர் 18 ஆம் திகதி நடைபெற்றது. மேலும், கொழும்பு, வெலிசர கடற்படை வளாகத்தில் 2022 நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் இரவு முழுவதும் பிரித் ஓதுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

அதன்படி, கடற்படை பிரதாணி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இன்று (2022 டிசம்பர் 01) மதகுரு நஜேந்திரன் சர்மா சுரேந்திரன் அவர்களினால் இந்து வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன் இங்கு நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த, அங்கவீனமாகிய மற்றும் தற்போது சேவையாற்றும் கடற்படை வீரர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினர்களுக்கும், முழு கடற்படையினருக்கும் 72வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆசிகள் வழங்கப்பட்டது.

இந்த இந்து மத நிகழ்ச்சிக்காக, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, கடற்படை காலாட்படை தளபதி ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும, பணிப்பாளர் கடற்படை (சம்பளம் மற்றும் ஓய்வூதியம்) கொமடோர் ரொஹான் பெர்னாண்டோ, இலங்கை கடற்படை கப்பல் கட்டும் தளத்தின் தளபதி கப்டன் சாலிய பரணகம. கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர் கலந்துகொண்டனர்.