புதிய கடற்படை தளபதி விமானப் படை தளபதியுடன் சந்திப்பு

அண்மையில் நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2022 டிசெம்பர் 28) விமானப்படை தலைமையகத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை சந்தித்தார்.

அதன் படி, விமானப்படைத் தலைமையகத்திற்கு புதிய கடற்படைத் தளபதியை விமானப்படைக் கொடிகளின் மத்தியில் சம்பிரதாய ரீதியில் வரவேற்கப்பட்டதுடன் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இலங்கை கடற்படைத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் விமானப்படைத் தளபதியுடன் மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாக இந்த சந்திப்பு அமைந்தது. இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது இலங்கை கடற்படையின் 25 வது தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிற்கு விமானப்படைத் தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இவர்கள் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோருக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.