காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு கடற்படையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு தொடர்பான கடமைகள் 2022 டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் இன்று (2023 ஜனவரி 01) இலங்கை இராணுவம் மூலம் இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வுகள் காலி முகத்திடலில் மற்றும் கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

அதன்படி, அடுத்த 03 மாதங்களுக்கு, காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு தொடர்பான கடமைகள் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த நடவடிக்கைகள் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும்.