CARAT–2023 இருதரப்பு பயிற்சிக்காக கொழும்பில் தொடர் இசை நிகழ்ச்சிகள்

அமெரிக்க கடற்படையின் பசிபிக் கப்பல்கள் குழுவினால் நடத்தப்படுகின்ற 2023 ஆம் ஆண்டிற்கான ஒத்துழைப்பு தயார்நிலை மற்றும் பயிற்சி பற்றிய (Cooperation Afloat Readiness and Training Exercise - CARAT–2023) இருதரப்பு பயிற்சி 2023 ஜனவரி 19 ஆம் திகதி தொடங்கப்பட்டது. பயிற்சியுடன், பங்குதாரர்களிடையே கலாச்சார பரிமாற்றத்தின் மூலம் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்காக, அமெரிக்க 7வது கப்பல் குழுவின் இசைக்குழுவும் இலங்கை கடற்படை இசைக்குழுவும் கொழும்பில் தொடர்ச்சியான இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன, மேலும் இதன் முதல் இசை நிகழ்ச்சி 2023 ஜனவரி 20, அன்று மாலை கொழும்பு கலங்கரை விளக்க வளாகத்தில் நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சித் தொடரின் கீழ் இன்று (2023 ஜனவரி 21,) நடைபெறுகின்ற இசை நிகழ்ச்சி கொழும்பில் உள்ள Dutch Hospital வளாகத்தில் மாலை 0630 மணி முதல் 0800 மணி வரையிலும் நடைபெறும், மேலும், இந்த இசை நிகழ்ச்சித் தொடரின் கீழ் 2023 ஜனவரி 22 ஆம் திகதி மாலை 0630 மணி முதல் 0800 மணி வரை கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவிலும், 2023 ஜனவரி 23 ஆம் திகதி மாலை 0630 மணி முதல் 0800 மணி வரை பத்தரமுல்ல நீர் பூங்காவிலும், 2023 ஜனவரி 24 ஆம் திகதி மாலை 0630 மணி முதல் 0800 மணி வரை சுதந்திர சதுக்கத்தின் ஆர்கேட் வளாகத்திலும், இறுதி இசை நிகழ்ச்சி ஜனவரி 25 ஆம் திகதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை கொழும்பு One Galle Face வளாகத்தில் நடைபெற உள்ளது.