கடற்படையினரின் தொழில்நுட்ப பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 951 வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செல்ல கதிர்காமத்தில் பொதுமக்களுக்காக திறந்து வைப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக நிர்மாணிக்கப்பட்ட 951 வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2023 ஜனவரி 29) தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவின் தலைமையில் செல்ல கதிர்காமம் ஸ்ரீ தர்ம நிகேதன மஹா விகாரை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதார அமைச்சின் அனுசரணையில் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவளப் பங்களிப்போடு கடற்படையின் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஸ்தாபிப்பதை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, செல்ல கதிர்காமம் ஸ்ரீ தர்ம நிகேதன மகா விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு இன்று (ஜனவரி 29, 2023) மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினால் செல்ல கதிர்காமம் பகுதியில் சுமார் 450 குடும்பங்களின் மற்றும் பக்தர்களின் சுத்தமான குடிநீர் தேவையை இலகுவாக பூர்த்தி செய்ய முடியும்.

மேலும், ஊவா வெல்லஸ்ஸ தெதிஸயின் பிரதம சங்கநாயகம், செல்ல கதிர்காமம் ஸ்ரீ தர்ம நிகேதன பிரிவேன் மகா விஹாராதிபதி, சாஸ்த்திரபதி புனித ஹீல்லே ஞானானந்த் தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. , கடற்படைத் தலைமையகத்தின் மற்றும் தென் கடற்படைக் கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் அப் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.