கடற்படை நடவடிக்கைகளுக்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 03 விசேட வாகனங்கள் இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பு

இலங்கை கடற்படையின் செயற்பாடுகளுக்காக Ideal Motors நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட 03 விசேட மாதிரிக் வாகனங்கள் (All-Terrain Vehicles - ATV) நிறுவனத்தின் தலைவர் திரு.நளீன் வெல்கமவினால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் 2023 பெப்ரவரி 22 கையளிக்கப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்த வாகனங்கள் கரையோரப் பகுதிகள் மற்றும் எந்தவொரு கரடுமுரடான நிலப்பரப்பிலும் கடற்படை நடவடிக்கைகளுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், கடற்படையின் பணிகளை நிறைவேற்றுவதற்காக கடற்படை மரைன் படைப்பிரிவினால் மேற்கொள்ளப்படும் கடலோர கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாட்டு நடவடிக்கைகளுக்கு இந்த வாகனங்களை எதிர்காலத்தில் திறமையாக பயன்படுத்த கடற்படையால் முடியும்.

மேலும் இந்நிகழ்வில் கடற்படையின் பிரதி தலைமை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் (செயற்பாடுகள்) ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, கடற்படை காலாட்படை தளபதி ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும, பணிப்பாளர் மரைன் கொமடோர் சனத் பிடிகல மற்றும் கடற்படை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் Ideal Motors நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.