திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படையின் ‘USS CHARLESTON (LCS - 18)’ கப்பல் தீவை விட்டு புறப்பட்டுள்ளது

அமெரிக்க கடற்படையின் ‘USS CHARLESTON (LCS - 18)’ போர்க்கப்பல் 2023 மார்ச் மாதம் 11 ஆம் திகதி காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

இதன்படி, திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த Independence - Class Littoral Combat Ship வகையின் போர்க் கப்பலான ‘USS CHARLESTON (LCS - 18)’ கப்பல் 127.4 மீற்றர் நீளமும், மொத்தம் 100 கடற்படையினர்களைக் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் Lamson, A.A செயற்படுகிரார்.

‘USS CHARLESTON (LCS - 18)’ இன் கட்டளை அதிகாரி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 11 மார்ச் 2023 அன்று கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளப்பட்டது.

மேலும், ‘USS CHARLESTON (LCS - 18)’ என்ற கப்பல் இன்று (2023 மார்ச் 12) காலை தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றதுடன் அப்போது குறித்த கப்பலுக்கு கடற்படை மரபுப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது.