இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் கௌரவ திருமதி Rita Giuliana MANNELLA அவர்கள் இன்று (2023 மார்ச் 16) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் மற்றும் கடற்படைத் தளபதி இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து நட்பு ரீதியாக கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. மேலும் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் கொமடோர் கோசல வர்ணகுலசூரிய மற்றும் இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் பெபியோ சிமா (Captain (Navy) Fabio CIMA) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி இலங்கைக்கான இத்தாலிய தூதுவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.