பாதுகாப்பு அமைச்சின் ஊடக பணிப்பாளரால் எழுதப்பட்ட ‘Story of the World: Geopolitical Alliances and Rivalries Set in Stone’என்ற புத்தகத்தின் பிரதியொன்று கடற்படைத் தளபதிக்கு வழங்கப்பட்டது

பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நலீன் ஹேரத் எழுதிய ‘Story of the World: Geopolitical Alliances and Rivalries Set in Stone’ என்ற நூலின் பிரதியொன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் கடற்படைத் தலைமையகத்தில் இன்று (21 மார்ச் 2023) வழங்கப்பட்டது.

‘Story of the World: Geopolitical Alliances and Rivalries Set in Stone’ என்ற புத்தகம் உலகளாவிய புவிசார் அரசியல் துறையில் புதிய போக்குகள் மற்றும் புதிய கூட்டணிகள் மற்றும் போட்டி சக்திகளின் தற்போதைய வளர்ச்சிகளை ஆராய்கிறது.

அத்துடன், உரிய நேரத்தில் முக்கியமான புத்தகம் ஒன்றை வெளியிடுவதில் பங்களிப்பு செய்த பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளீன் ஹேரத்துக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.