இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'KRI Bima Suci' நட்புரீதியான விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான 'KRI Bima Suci' என்ற பயிற்சிக் கப்பல் இன்று (2023 ஏப்ரல் 20) நட்புரீதியான விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 'KRI Bima Suci' கப்பல் (Sailing Ship) 112.2 மீட்டர் நீளமும், மொத்தம் 95 பணியாளர்களை கொண்டுள்ளது. அதன் கட்டளை அதிகாரியாக Commander M. Sati Lubis பணியாற்றிகிரார்.

'KRI Bima Suci' கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (2023 ஏப்ரல் 20,) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன் அங்கு நினைவு சின்னங்களும் பரிமாற்றப்பட்டது.

இக்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அதன் முழு கடற்படையினரும் தீவின் முக்கிய இடங்களுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளும் இந்தப் பயிற்சிக் கப்பலை பார்வையிட உள்ளனர்.

மேலும், இந்த நட்புரீதியான விஜயத்தை முடித்துக் கொண்டு, 'KRI Bima Suci' என்ற கப்பல் 2023 ஏப்ரல் 22 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட உள்ளதுடன் அங்கு இலங்கை கடற்படையின் இரண்டு (02) பயிற்சி அதிகாரிகளும் பயிற்சிக்காக கப்பலுடன் இணைக்கப்பட உள்ளனர்.